Home News காலமானார்

காலமானார்

121
SHARE

கண்ணீர்ப்பூக்கள்!!

கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான அமரர் திரு.சி.கே. கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. மகாதேவி கந்தசுவாமி சென்ற சனிக்கிழமையன்று 09/09/2017, அவுஸ்திரேலியா (சிட்னி)யில் காலமானார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு கண்ணீர்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான அமரர் திரு.சி.க.கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. மகாதேவி கந்தசுவாமி சென்ற சனிக்கிழமையன்று காலமானார்.

அவர் தயானந்தன் (சிட்னி),டாக்டர் சாந்தினி (இலண்டன்),டாக்டர் அபிராமி (இலண்டன்), வாகீசன் (பிரிஸ்பேன்), கீதாஞ்சலி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயலட்சுமி (சிட்னி), டாக்டர் கந்தையா சிவகுமார் (இலண்டன்)இடாக்டர் ஜயந்தா ஆனல்ட் (இலண்டன்), துஷ்யந்தி (பிரிஸ்பேன்), நிர்மலராஜன் (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜேந்திரன், ஜனார்த்தனி,பிரணவன், சிவகாமி, ஆரன், ரம்யா, ஆரணி, ஹரிஹரன்,பார்கவி,சிந்தூரா ஆகியோரின் அன்புப் பாட்டியாரும் ஆவார்.

அவரது பூதவுடல் கிரியைகளுக்காக காசில் ஹில்லில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டு, பின் இறுதி மரியாதைக்காக றூக்வூட் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று மாலை(12/09/2017) 2-30 -3-30 மணிக்குமிடையில் தகனம் செய்யப்படும் என்பதைத்தெரியப்படுத்துகிறோம்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CONTACTS

AUSTRALIA: DHAYA +612 9649 6146 VAHEESAN +617 3376 0564 GEETHA +612 8850 0946

UK: SHANTINI +447791632927 ABHI: +447956699420