Home Events
555
SHARE

Roding Lane North,
Woodford Green,
Essex, IG8 8LH
Dr. Raj Karunakaran ,
President KHCOSA(UK),
Sunday 7th May 2017

அன்பு Dr. ராஜ் கருனாகரன்,

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்சங்க வசந்தம் 2017

இந் நிகழச்சியை நேற்று இரவு கண்டுகளித்து மிக மகிழ்ச்சியுற்றேன். நன்றாக ஒழுங்குபடித்தி திறமையாக ருசியான இரவு போஜனம் பரிமாறி மிகச் சிறப்பாக நடாத்தினீர்கள் உங்களுக்கும் உங்கள் செயற்குழுவிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவனாக இருந்தாலும் உங்கள் கல்லூரியின் வளர்ச்சியைக் கண்டு மிக மகிழ்ச்சிடைகின்றேன் சிறிது பொறாமையும்ந்தான் ஆனாலும் எம் ஈழத்தமிழர் முன்னேற்றம் கண்டு பெருமிதமடைகின்றேன்.
நீங்கள் கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும் புலமைப்பருசு திட்டங்கள் வேறு பல முன்னேற்றகரமான உதவிகள் பாராட்டுக்குரியது, உங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்.
பாடகி சௌந்தர்யா அரங்கத்திற்க்கு பாடல்படித்துக் கொண்டு வரும் பொழுது என்னுடன் சில மணித்துளிகள் சம்பாஷித்தார் அக்காட்ச்சி காணொளியாக்கப்பட்டது எனவே இந்நிகழ்ச்சியின் காணொளி இருவெட்டின் பிரதி ஒன்றை எனக்கு அனுப்பிவைக்கவும் அதற்க்கான செலவுகளை உங்களுக்கு காசோலை மூலம் அனுப்பி வைப்பேன்.உங்களுக்கு காசோலை எழுதவேண்டிய விபரத்தை நுழைவுச் சீட்டுக்கு அனுப்பியதற்க்கு காசோலை அனுப்ப எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தீர்கள் அதன்படி காசோலையை எழுதி அனுப்புவேன்.
நன்றி,
வணக்கம்.
அன்புடன்,
கே.ஜி.மகாதேவா

K.G.Mahadeva
London UK