Home Articles A tribute ot Idaikadar by S. Thedchenamoorthy

A tribute ot Idaikadar by S. Thedchenamoorthy

90

அமரர் நாகமுத்து நமசிவாய இடைக்காடர்

அமரர் நமச்சிவாய இடைக்காடர் அவர்கள் ஆயிரத்து தொளாயிரத்து இருபத் தொராம் ஆண்டு நவம்பர் இருபத் தொராம் திகதி இடைக்காடு எனும் அழகிய கிராமத்தில் நாகமுத்து, நாகம்மா தம்பதிகளுக்கு தவப்புதல்வனாக தோனறினார.; பிற்காலத்தில் இடைக்காடு எனும் கிராமத்தின் புகழ் பாரெங்கும் பரவ தமது தவப்புதல்வன் காரணமாக இருப்பார் என்று அத்தம்பதியினர் அவர்பிறந்த வேளையில் நினைத்திருக்க மாட்டார்கள்.

நமசிவாய இடைக்காடரின் ஆரம்பக் கல்வி தன் குடும்பத்தாரின் கல்வித் தொண்டால் உருவான வண்ணை வைத்தீஸ்வராக் கல்லுர்ரியில் ஆரம்பமானது. பின்னர் யாழ் மத்திய கல்லூரியிலும் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தொடர்ந்தது. கணிதம் தாவரவியல் இரசாயனவியல் ஆகியவற்றில் பட்டதாரியானார்.

அன்னாரது ஆசிரியப்பணி அதிபர் ஸேக்ஸ்பியர் நாகலிங்கம் அவர்களின் கீழ் 1947 இல் எமது கொக்குவில் இந்துக் கல்லுரியில் தொடங்கியது. எளிமையாகவும் நகச்;சுவையாகவும் போதிப்பதில் தன் நிகரற்றவராகத் திகழ்ந்தார். கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடம் நமசிவாய இடைக்காடரின் கடின உழைப்பால் உருவானது. விஞ்ஞான ஆய்வு கூடம் பின்னர் இரசாயன பௌதீக உயிரியல் ஆய்வு கூடங்களானது. இரசாயன ஆய்வு கூடம் அன்னாரது இரண்டாம் புகுந்த வீடானது..
கற்பித்தலோடு மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. மாணவர்களை விளையாட்டுத் துறை பேச்சுப் போட்டி போன்றவற்றில் ஊக்குவித்து விளையாட்டுப் போட்டி பேச்சுப் போட்டி போன்றவற்றை முன்னின்று நாடாத்தினார். முப்பது வருடங்கள் தொண்டாற்றிய பெருந்தகை தன் கடைசிக்கால ஆசிரியப் பணியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே பதவி உயர்வு பெற்று முடிக்காமல் போனது மிகமிகத் துரதிஷ்டமாகும்.

அன்னார் 1950-ம் ஆண்டு கொக்குவில் கோண்டாவில் கிராம சபைத் தலைவராக இருந்த செ. செ. நவரத்தினம் அவர்களின் புதல்வியாகிய மகேஸ்வரியை மணம் புரிந்து தயாபரன் இடைக்காடர், சசிரேகா, நித்தியா, கலாமணி, மீரா, மாலினி எனும் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.
பொது வாழ்விலும் அமரர் நமசிவாய இடைக்காடர் பெரும் பணியாற்றினார். அவர் குடும்பத்துக்கே பொதுவான தமிழ்ப் தொண்டில் அவரும் ஈடு படடார். தமிழ் மொழிக்கு ஆபத்து நேரும் என்று கண்ட போது அறவழிப் போராட்டத்தில் அவரும் ஈடுபட்டார்.

அன்னாரில் அன்பு கொண்டவரகளினதும் அன்னாரால் நேசிக்கப்பட்டவரகளினதும் உள்ளங்களில் அமரர் இடைக்காடர் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

S. Thedchanamoorthy
Vice President
KHC OSA (U. K)

Previous articleமாமனிதர் அமரர் கந்தசுவாமி
Next articleExercise to Brain – by N. A. Pirapaharan