

சுடுகாட்டு மலர்களாய் தினம் குண்டு விழும் பூமியிலும் உண்டு
தறிகெட்டோடும் பெயர்ந்த புலத்திலும் தாராளமாய் உண்டு
நெறிகெட்ட நெஞ்சினரையும் நெகிழ வைக்கும் திறனுண்டு
மாசற்ற மனத்தாரையும் தினம் மகிழ வைப்பதுமுண்டு
சிந்து நதிக்கரை யொரம் மலர்ந்தனவாம்
தென் பொதிகை மலையிலும் தவழ்ந்தனவாம்
குமரி முனையையும் கடந்தனவாம்
கதிர மலையிலம் கமழ்ந்தனவாம்
இன்று பாரெங்கும் வீசும் எம் கலைகள்.
மாயா மாருதியென
தேயாத் திங்களென
காயா ஞாயிறென
சாயாக் குன்றென
ஓயாதெம் கலைகள்



========================================================================================================
அன்று அவளைக்
காதலிக்க நேரமில்லை
படிப்போடு அலைந்தேன்
இன்று அவளோடு
கதைக்க நேரமில்லை
இருவரும் வேலையோடு
அலைகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர் வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன.
--------------------------------------------------------------------------------------------------------------------
சாம்பல் மேட்டில் ஒரு தோட்டம் செய்ய முனைகிறோம்
உள்ளே இருப்பது எதிர்கால விருட்சங்களின் வித்துக்களா?
அல்லது நீறுபூத்த நெருப்புக்களா?
பூகம்பத்தில் பூப்பறித்து பூமாலைகள் செய்கிறோம்
சமாதான தேவதைக்கு சாத்திரப்படி ஒரு சாத்துப்படியாக்க
சென்று சேர்வது தேவதைக்கா?
சூறாவளியில் சுடர் ஒன்று ஏற்றுகிறோம்
அமைதிச் சூரியன் அஸ்தமித்தால்
இது ஒரு அணையாச் சுடரா?
வேற்றுமைத் தீயணைக்க வெதும்பி நிற்கிறோம்
ஒற்றுமை மேகங்கள் மழை தருமா
கிழக்கில் தெரிவது தொடுவானமா?
கலைஞர்; பலர்வளர் திண்ணை–அது கற்றவர்
கருத்திலுயர் வண்ணார் பண்ணை–அங்கு
ஆண்டவர் வழிவந்த நன்நெறி கண்ட
அன்னை தந்தையர்க்கு
பிறந்தாய் - அன்பில்
நிறைந்தாய்
ஷெல்லியோடு ஷேக்ஸ்பியரையும் அறிவாய் - கம்பன்
கவியோடு வள்ளுவன் குறளும் தெரிவாய்
விஞ்ஞானம் மெய்ஞானம் எனப்
பலஞானம் கரைகண்டு
தெளிந்தாய் - அறிவில்
உயர்ந்தாய்
கொட்டிலாய் கிடந்த தெங்கள் பள்ளி – அங்கு
கோட்டான்கள் வந்து கொள்ளும் பள்ளி
நின்மதி கெண்டு நிதிசேர்த்து
வானுயர் கட்டிடம்
அமைத்தாய் - அறிவு
சமைத்தாய்
சண்டியர்;; வாழ்ந்த தெங்கள் கிராமம் - பல
சண்டைகள் நடந்ததொரு சமூகம் - அங்கு
அன்பென்றும் அறிவென்றும்
பண்பென்றும் பழக்கங்கள்
விதைத்தாய் - நின்முத்திரை
பதித்தாய்
கிருபாகர சுப்பிரமணியன் ஒருபக்கம் - அந்த
மஞ்சவனப்பதி மருகன் மறுபக்கம் - இருக்கும்
வெள்ளைக் கலைவாணி வதிபதியாள
நல்ல அறிவில் உயர் அதிபதியாக
வந்த சுவாமி – சி கே
கந்த சுவாமி.
வே. தர்மராஜா
--------------------------------------------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------------------------------------------
பெயர்ந்த புலம்
அலாரம் அலற அதிகாலை துயிலெழுந்து
சாளரம் வழியே சற்றே பார்த்தேன்,
பெயர் தெரியாத பறவை ஒன்று
பறந்து சென்றது.
பெயர் தெரியாத மரம் ஒன்று
பெரிதாகப் பூத்திருந்தது.
பெயர் தெரியாத பக்கத்து
வீட்டுக்காரன் கையசைத்துச் சென்றான்.
அவன் சென் றது2004 make Ford Mondeo car.
தண்ணீருக் கீழே தட்டுகளிரண்டு தட்டுப்பட்டன.
தண்ணீர் எழுந்தது சரிந்தது வீழ்ந்தது.- விழுந்த
தண்ணீருக்கு எடுத்தது கடும் தாகம்
தண்ணீர் ஓடி வந்தது முத்திசை நோக்கி
உயிர்கள் பல குடித்தழிக்க.
ஆசேயில் ஆழி கொண்டதும் எம் உறவே.
அம்பாந்தோட்டையில் அழிந்ததும் எம் உறவே
அம்பாறையில் அநியாயமய் போனதும் எம் உறவே
நாகையில் நாசமாய்ப் போனதும் எம் உறவே
மட்டு நகரில் மண்ணோடு போனதும் எம் உறவே
மனிதனுக்கு ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தமிழனுக்கு போரிலும் சாவு நீரிலும் சாவு
சர்வ துயர் கண்டு சகலமும் இழந்தவனை
சர்வ தேசமும் கை விட்டது
பாசத்தால் பட்ட துயரின்னும் மறையவில்லை
நேசத்தால் இங்கு நெஞ்சுருகி நிற்கின்றோம்
சோகத்தில் நாரேடுத்து கண்ணீரில் மலரேடுத்து
எம்மிதய அஞ்சலியை செலுத்துகிறோம் நாம்
குனிந்து வளைந்து கூடை நிறைய
கொழுந்தெடுப்போமே - நாங்கள்
கொழுந்தெடுப்போமே. - விரல்கள்
வளைந்தெடுப்போமே.
லயத்தில் நெரியு
மெங்களுக்கு பயமுமேதடி
சுருதி லயமுமேதடி
விண்ணில் வாழும்
பறவை போலப் பாட்டுப் பாடடி
நல்ல ஆட்டம் மாடடி.
மலையில் லெறும் எங்களுக்கு
முகிலுமெட்டுமே - நல்ல
மழையுங்கொட்டுமே.
குறிஞ்சி நிலக் கூட்டத்துக்கு
வள்ளி இணையடி - அந்த
குமரன் துணையடி.
விண்ணில் வாழும் பறவை போல
பாட்டுப் பாடடி - நல்ல
ஆட்டம் ஆடடி.
விம்பிள்டன் கோயில் வேழம் - நிதம்
வேண்டி னோhர்க் கருள் ஞானம் - அவர்
அன்புக்கொரு தம்பிக்கொரு
நம்பிக்குற மாதைத்தரு
தும்பிக்கை - வை
நம்பிக்கை.
வேல்ஸில் விளையாடும் வேலன் - அவன்
வேண்டிச் செல்வோர்க் கருள் பாலன்
இசையோடும் எழிலோடும்
மயிலாடும் குயில் கூவும்
தோட்டம் - எங்கள்
தேட்டம்.
ஆச்வேயில் ஆடும் அழகன் - எங்கள்
உயர் வாசற் குன்றுக் குமரன் - அவன்
பண்ணொடும் பதத்தொடும்
பெண்ணோடும் நிதமாடும்
ஆட்டம் - பக்தர்
கூட்டம்.
ஈசன் மகனுக் கொரு ஈஸ்ற்ஹாம் - அது
ஈடில்லாப் புகழ் சேர் கொற்றம் - அது
மானொடும் மயிலாடும்
தேரொடும் எழில்கூடும்
தோட்டம் - கந்த
கோட்டம்.
ராஜராஜேஸ்வரி தோற்றம் - அது
ஸ்ரோன்லிக்கொரு ஏற்றம் - அந்த
ஈஸ்வரன் இணைதேவி
ஈடில்லாத் துணைதேடி
வருவார் கோடி - பல
பாடல் பாடி.
ஈலிங்கில் கனக துர்கை - என்றும்
வேண்டுவோரக் கருள் பொற்கை - அந்த
மகுடன் வதை அம்மன் கதை
நம்பியுளம் கொள்வேர் துயர்
தீர்ப்பாள் - அருள்
சேர்ப்பாள்.
ஈசனார்க் கொரு கோயில் - அது
இயைந்தது லுவிசியம் தன்னில் - அந்தப்
பொடி பூசி மதி சூடி
நதி சூடி சதி பாதிச்
சர்வேசன் - எங்கள்
தவநேசன்.
ரூட்டிங்கில் முத்து மாரி - அன்பைத்
தருவாள் அள்ளி வாரி
முதலும் அவள் முடிவும் அவள்
அருளும் அவள் பொருளும் அவள்
சிவ சக்தி – தருவாள்
நன் முத்தி
மஹாலக்ஷ்மி மனமகிழ் மன்றம் - அது
மட்டில்லா மகிமை சேர் ஈஸ்ற்ஹாம் - அங்கு
சொத்தைத்தரு அத்தைக்கொரு
அன்பின்னுரு அடியார்தரு
காணிக்கை – நிதம்
சேருங்கை.
என்பீல்ட் நகர் எழுந்தருளி - நிதம்
எமக்கருள்வாள் நாகபூசணி - எங்கள்
தாயகத் துயர் துடை
தாயவள் உயர் பத
மென்றும் நாடு - அங்கு
தோன்றும் நாடு.
மிச்சப்பதி அமர் சுந்தரேசர் - எங்கள்
மீனாட்சி மனங்கவர் எழில்நேசர்
கிளி கொண்ட துணை சேர்ந்த
நஞ்சுண்ட நீலகண்ட
நடராசர் - நற்
பக்தநேசர்.
எத்தெய்வமானாலு மென்ன - இங்கு
எத்தலமானாலு மென்ன – எனறும்
அன்;பைக் கொடு அருளைப் பெறு
அகந்தை விடு அறிவில் எடு
தூய்மை - வாயில்
வாய்மை.
- வே. தர்மராஜா

எட்டுப் பரப்பில் ஒரு தோட்டம்
சித்தர் நடராசர் மகள் வீட்டுக்கும்
சின்னத்துரை தம்பி வீட்டுக்கும்
நட்ட நடுவில் பசுமையாக.
தம்பி வீட்டில் தம்பியின்
தானைத் தளபதிகளில் ஒருவன்.
உளவுத்துறைத் தகவல்.
உண்மையான தகவல்
பட்டப்பகலில் விண்ணிலிருந்து விழுந்தது.
இலக்கு அந்தத் தளபதிதான்
முற்றத்தில் விளையாடிய
நடராசர் பேரன். வயது ஒன்பது
உடல் வேறு தலை வேறானான்
விழுந்தது தம்மமா?
திருமலைக்கு போகதேடி
அங்கு சுடும் கிணறு ஆறிப்போகும்.
மட்டு நகர் போகதேடி
பாடும் மீன்கள் பாட மறுக்கும்
கதிரமலை போகதேடி
அங்கு வள்ளி மயில் பொறாமை கொள்ளும்
சந்நிதிக்குப் போகதேடி
அங்கு தொண்டமனாறு புளித்துப்போகும.;
நிலாவரைக்குப் போகதேடி
அங்கு ஆழ் கிணறு வற்றிப்போகும்
மன்னாருக்குப் போகதேடி
அங்கு கருவாடு மீனாய்த் துள்ளும்.
மருதடிக்குப் போகதேடி
அங்கு கணேசன் திரும்பி நிற்பான்
கீரிமலை போகதேடி
அங்கு மனித முகம் குதிரையாகும்
வன்னிக்குப் போகதேடி
அங்கு செல்லடிகள் பூவாய் உதிரும்.
We are in the spaces.live - click: khcosauk