Home Archives கொ.இ.மாணவி சாதனை!!

கொ.இ.மாணவி சாதனை!!

72
SHARE

கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று கொக்குவில் இந்து மாணவி சாதனை!!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2017ல் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி செல்வி பாலசுப்பிரமணியம் தாட்சாயினி யாழ் மாவட்டத்தில் முதன் நிலை பெற்று சாதனை நிலை நாட்டினார்.
கொக்குவில் இந்துவிற்க்கு பெருமை சேர்த்த செல்வி தாட்சாயினிக்கு கல்லூரி சமூகம் சார்பில் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
வர்த்தக பிரிவில் யாழ் மாவட்டத்தின் முதலாம் இரண்டாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2017ல் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி செல்வி சாரங்கா விஜயகுமார் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் செல்வன் கண்ணபிரான் நிவேகிதன் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்
கொக்குவில் இந்துக் கல்லூரி சாதனை 13 மாணவர்கள் 3A!
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2017ம் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் 3A எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
வணிகப் பிரிவில் 07 மாணவர்களும் கணித பிரிவில் 03 மாணவர்களும் கலைப்பிரிவில் 03 மாணவர்களும் 3A சித்தி பெற்றும் உயிரியல் பிரிவில் 02 மாணவர்கள் 2AB சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகம் சார்பில் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.