SHARE

சாரணர் இயக்கத்தின் இனிதே நிறைவுற்ற பவளவிழா!

எமது கல்லுரிஇல் சாரணர் இயக்கம் 1943ம் ஆண்டு 07திகதி ஆடி மாதம் ஆரம்பித்து இன்றுடன் ஏழுபத்திஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் பவளவிழா கொண்டாடப்பட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் சாரணிய இயக்கத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்கள் கல்லூரி அதிபர் திரு.ம.ஞானசம்பந்தன் தலைமையில் கல்லூரியில் கடந்த 07-07-2018 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திரு சுடர் மகேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் திரு மேரில் குனதிலக அவர்களும் , விருந்தினராக யாழ் மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு இ.தவகோபால் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரியின் பல பழைய மாணவர்கள் இன் நிகழ்விற்க்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் உலகின் பல திசைகளில் இருந்தும் பெருத்த உற்சாகத்துடன் வந்து கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
சாரணர் பாசறை நிகழ்வுகள், சாரணர் கெளரவிப்பு, கொக்குவில் இந்துவின் சாரணியன் மலர் வெளியீடு என கொக்குவில் இந்துக் கல்லூரியில் சாரணிய கொண்டாட்டங்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குபடுத்தபட்டிருந்தது.