SHARE

கொக்குவில் இந்துவின் சாரண பழைய மாணவர்களுக்கான அழைப்பு!

கொக்குவில் இந்துக் கல்லூரி சாரணியத்தின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பவள விழா சஞ்சிகை வெளியிடுவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் வசிக்கும் பழைய மாணவர்களிடமிருந்து ஆக்கங்களை பவள விழா குழுவினர் எதிர்பார்கின்றார்கள்!

அன்பார்ந்த கொக்குவில் இந்துக் கல்லூரியின் சாரண பழைய மாணவர்களே!!!

எமது பாடசாலை சாரணியத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
அதன் பொருட்டு பவள விழா சஞ்சிகை வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் வசிக்கும் பழைய மாணவர்களாகிய உங்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

பின்வரும் உள்ளடக்கங்களை கொண்டதாக உங்கள் படைப்புக்கள் அமையலாம்……

1 பாடசாலைக்கால சாரணியத்தின் நினைவுகள்.
2. சாரணிய செயற்பாடுகள் தொடர்பான பாடசாலை கால புகைப்படங்கள். (இதர புகைப்படங்களும்
ஏற்றுக்கொள்ளப்படும்)
3. கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள்,கட்டுரைகள். (அனைத்தும் சாரணியம் தொடர்பானதாக இருக்க
வேண்டும் )
படைப்புகளை சமர்ப்பிக்கும் போது பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளவும்…..
1. படைப்புகள் அனைத்தும் சாரணியம் தொடர்பானதாக இருக்க வேண்டும்.
2. 25.04.2018 க்கு முன்பு கிடைக்கக்கூடியதாக அனுப்பப்பட வேண்டும்.
3. உங்கள் ஆக்கங்கள் மென் பிரதியாக ( soft copy)இருத்தல் வரவேற்கப்படுகின்றது. அவற்றிற்கு Word document
& pdf document இரண்டையும் இணைக்கவும்.
4. ஆக்கங்களின் படைப்பாளி தனது புகைப்படத்தையும் படைப்புடன் இணைக்க முடியும். (வன் பிரதி-hard copy
எனின் 4 passport அளவு புகைப்படங்களை இணைக்கவும்.)
5. அனைத்து புகைப்படங்களும் மென் பிரதியாக அனுப்பப்படல் சிறந்தது (scanned copy) (வன் பிரதிகளும்
ஏற்றுக்கொள்ளப்படும்)
6. எந்தவொரு படைப்பும் சஞ்சிகைக்கு பொருத்தமற்றது என கண்டறியப்படின் அதை நிராகரிக்க இதழாசிரியர்
குழுவிற்கு உரிமை உண்டு.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

திரு.ச.அமலராஜ்,
இல.47,அரசடி வீதி,
வண்ணார் பண்ணை,
யாழ்ப்பாணம்.
மின்னஞ்சல் முகவரி : samal2015@gmail.com

குறிப்பு:

சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கான உங்களது வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
சஞ்சிகையினை சிறப்பாக வெளிக்கொணர்வதற்கு பண உதவி எதிர்பார்க்கப்படுகின்றது.விரும்பியவர்கள் தமது பங்களிப்புகளை செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :

திரு.ச.அமலராஜ்
077 855 8715
071 215 9795
070 256 5556
021 222 7360

திரு.ச.அமலராஜ்,
உப தலைவர், பவள விழா குழு, சாரணியம்,
கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்.