Home Archives District Athletic Sports

District Athletic Sports

271
SHARE

மாகாண மட்ட தடகள விளையாட்டு போட்டி – 2018

கடந்த 06ம் திகதி ஆரம்பமாகி 10ம் திகதிவரை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் விளையாட்டுபோட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளை பெற்றனர்.
வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதோடு இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

செல்வன் ச.சிறீதனுஜன் 2-வெள்ளி 1-வெண்கலம்
20 வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்டத்தில் 23.30 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் 20வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 400மீற்றர் ஓட்டத்தில் 51.10 செக்கனில் ஓடி வெண்கலப்பதக்கத்தையும் 20வயதுக்கு குறைந்த ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் 11.40 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தை செல்வன் ச.சிறீதனுஜன் பெற்றார்.

செல்வன் ச.டனீசன் 1-தங்கம் 1-வெள்ளி
18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் – முப்பாச்சல் போட்டியில் 13.63மீற்றர் தூரம் பாய்ந்து தங்க பதக்கத்தையும் 18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் – 400 மீற்றர் ஓட்டத்தில் 53.00 செக்கனில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றார் செல்வன் ச.டனீசன்.

செல்வி.ந.மாதுமை 1-தங்கம்
14 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 15.00 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றார் செல்வி.ந.மாதுமை
செல்வி ந.விதூசனா 1-தங்கம்
18 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான 100 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 18.03 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றார் செல்வி ந.விதூசனா

செல்வி ச.சகானா 1-வெண்கலம்
18 வயதுக்கு குறைந்த பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் செல்வி ச.சகானா வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

செல்வன்.த.மதீசன் 1-தங்கம்
14 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் 13.00 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றார் செல்வன்.த.மதீசன்.

செல்வன் ச.பிரவீன் 1-தங்கம்
14 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான குண்டெறிதலில் 10.96 மீற்றர் தூரம் எறிந்து தங்க பதக்கத்தை பெற்றார் செல்வன் ச.பிரவீன்.

18 வயதுக்குட்பட்டோர் பெண்கள் அஞ்சல் ஓட்டம்- தங்கம்
4*100 18 வயதுக்குட்பட்டோர் பெண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 56.8 செக்கனில் ஓடி தங்க பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.

18 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அஞ்சல் ஓட்டம்- வெண்கலம்
4*100 18 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 47.2 செக்கனில் ஓடி வெண்கல பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.

20 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் அஞ்சல் ஓட்டம்- வெண்கலம்
4*100 20 வயதுக்குட்பட்டோர் ஆண்களுக்கான அஞ்சல் ஓட்டத்தில் 46.8 செக்கனில் ஓடி வெண்கல பதக்கத்தை பெற்றது கொக்குவில் இந்து.

முதலிடம் பெற்றது மன்னார் வலயம்

வட மாகாணப் பாடசாலைகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான 11 ஆவது தடகளப் போட்டிகளில் மன்னார் வலயம் முதலிடம் பெற்றது.

733 புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் முதலிடத்தைப் பெற்றது.
634 புள்ளிகளைப் பெற்ற வலிகாமம் வலயம் இரண்டாமிடத்தையும் 529 புள்ளிகளைப் பெற்ற யாழ். வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றன. 262 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி வலயம் நான்காமிடத்தையும் ல் 258 புள்ளிகளைப் பெற்ற வடமராட்சி வலயம் ஐந்தாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

தொடர்ந்து வந்த இடங்களை, வவுனியா தெற்கு (245), முல்லைத்தீவு (222), தென்மராட்சி (127), துணுக்காய் (87), மடு (81), தீவகம் (60), வவுனியா வடக்கு (11) பெற்றுக் கொண்டன.

SHARE
Previous articleGold medal for KHC!
Next articleAnnual General Meeting 2018/19