SHARE

மூளைக்கு வேலை கொடுங்கள்

நாம் உடல் அவயங்களுக்குக கொடுக்கும் ஆரோக்கிய முக்கியத்துவத்தில் ஒரு பங்கு கூட மூளைக்குக் கொடுப்பதில்லை. மூளையை முற்றிலும் மறந்துவிடுகிறோம். முட்டாள் என்று திட்டு வாங்கும் போது கோபப்படுகிறோம். நமக்கு 18 வயதாக இருக்கும்போது 100 பில்லியன் நினைவு நரம்புகள் வலுவாக இயங்கி வருகிறதாம். வயது ஏற ஏற நரம்புகளின் அளவு குறைந்து கொண்டே போகிறது. மூளையின் பெரும் பாகம் இயக்கப்படாமல் உபயோகமற்;று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மூளைக்கு பயிற்சி கொடுத்து இயக்கிக் கொண்டேயிருந்தால் நம்மில் பலரும் ஐஸ்டைனாக திகழ முடியும். மூளைக்கு பயிற்சி மட்டுமல்ல நல்ல பாதுகாப்பும் தேவைப்படுகிறது. இதோ மூ

மூளையப் பாதுகாக்கும் பட்டியல்

1. காலை உணவைத்தவிர்த்தல்.
காலை உணவுதான் ஒவ்வொருவருக்கும் முக்கியமான சத்துணவு. சிலர் இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைப்பதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் காலை உணவைத் தவிர்த்து பட்டினி கிடக்கிறார்கள். இது மிகத் தவறு. இரவு ஓய்விற்கு பிறகு காலையில் மூளைக்கு செல்ல வேண்டிய விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் செல்லாது போனால் மூளைத்திசுக்கள் செயலிழந்து விடுமாம். இது மந்த புத்திக்கு ஏதுவாகிவிடும்.

2. அதிகமாக உண்ணுதல்
பட்டினி கிடப்பது எப்படி தவறானதோ, அதுபோல் அதிகம் உண்ணுவதும் மூளைக்கு ஆபத்து. மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்புச்;சத்து படிந்து கடினமாகி விடுவதால் இரத்த ஓட்டம் தடை செய்யப்பட்டு மூளையின் இயக்கத்தைக் குறைத்துவிடும்.

3. புகை பிடித்தல்.
புகை பிடிப்பது ஏன் ஆபத்தாகிறது?
புகையிலையில் உள்ள நச்சு வாயுவால் மூளைக்குச் செல்ல வேண்டிய ஒட்சிசனின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் மூளை சுருங்கத் தொடங்குகிறது. பிற்காலத்தில் இப் புகைப் பழக்கத்தால் அதிக மறதி ஏற்பட்டு அல்ஸிமர்’ நோயால் பாதிக்கப் படுகிறார்களாம்.

4. அதிக இனிப்பு ஆபத்து
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு உயர உயர உணவில் உள்ள புரதச்சத்தை இரத்தம் உறிஞ்சுவது குறைந்து போகுமாம்;. இதனால் உடல் சக்தி குறைந்து களைத்துப் போவதுடன் மூளை வளர்ச்சியும் தடைப்பட்டு உடல் அவயங்கள் செயலிழக்கத் தொடங்கி விடுமாம்.

5. மாசுக் காற்று.
நம் உடலிலே மூளைதான் மற்ற உறுப்புக்களைவிட அதிகமான அளவு ஒட்சிசனைப் பாவிக்கிறது. மாசுக் காற்றை சுவாசிப்பதனால் மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைப்பது தடைப்படுகிறது. மூளையின் இயக்கமும் இதனால் பாதிப்படைகிறது. மூளை செயலிழப்பதற்கு இது ஏதுவாகிறது. சுத்தமான காற்றுக்கு எங்கே போவது? சுற்றுப் புற சூழலைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியம் புரிகிறதா?

6. தூக்கமின்மை.
மூளைக்கு ஓய்வு அத்தியாவசியம். தூக்கமின்மையால் ஒய்வில்லாமல் வேலை செய்ய மூளை கட்டாயப் படுத்தப்படுகிறது. இதனால் மூளையின் செல்கள் களைத்துப்போய் கொஞ்சம் கொஞ்சமாக செயலலிழக்கத் தொடங்குகிவிடுமாம்.

இதனால் கைகால் நடுக்கம், செயலில் மன ஒருங்கிணப்பு இல்லாமல் மனமும் உடலும் சோர்ந்து போய் விடுவதால் எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்க முடியாமல் ‘முட்டாள்’ பட்டம் பெறுவோம்.

7. முகத்தை மூடிக்கொண்டு தூங்கலாமா?
தூங்கும்போது ஒருபோதும் முகத்தை மூடிக்கொண்டு தூங்கக் கூடாது. மூடியிருக்கும் போர்வைக்குள் நாம் வெளிவிடும் காபனீரெட்சைட்டை திரும்ப சுவாசிக்க வேண்டிய நிலை இதனால் ஏற்படுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைப்பதில்லை. மூளை எப்படி வேலை செய்யும்?

8. உடல் நிலை சரியில்லாது போனால்!
உடல்நிலை சரியில்லாதபோது அதிக உடல் இயக்கத்தை பலவந்தமாக செய்வதோ அல்லது கடினமாக படிப்பதோ மூளையின் செயல்திறனை குறைக்க வைப்பதுடன் மூளையை நிரந்தர நோயாளியாக்கிவடும்.

9. மூளையைத் தூண்டுவது அவசியமா?
மூளையைக் கசக்கிப்பிழி என்பார்களேஅதில்தான் இருக்கிறது புத்தியின் இரகசியம். எப்போதும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டுமாம். (தூங்கும் நேரத்தைத் தவிர). ஏன், எதற்காக, எப்படி என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியாம்.
தேமேன்று போட்டதை சாப்பிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தால் நாளடைவில்
மூளையும் தேமென்று சுருங்கத் தொடங்கிவிடும். விளைவு முட்டாள் பட்டம் தான்.

10. அதிகமான உரையாடல் (அக்கப் போர் இல்லை)
புத்திபூர்வமான உரையாடல் மூளையின் செயல்திறனை முடுக்கிவிட்டு மூளையின் எல்லாப் பாகங்களிற்கும் வேலை கொடுப்பதினால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக்கொள்ளலாம்.
மூளைப்பயிற்சி செய்யும் முறையை மூளை றெஸ்பிரேஷன் என்கிறோம். உடற்பயிற்சி மூலம் கழுத்து, தோள், பளுவைக் குறைத்து மூளைக்கு அதிக ஒட்சிசனைப் போகும் படி செய்தாலே உடல் நிதானப்படுவதுடன் மனம் ஒருமைப் பட்டு மனத்திறமை மற்றும் ஆர்வத்திறமை அதிகரிக்கும். இனியாவது உடற்பயிற்சியுடன் சரியான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து மூளைக்கு பயிற்சி கொடுத்து மூளையைப் பாதுகாத்து கொள்வோம்.

உடற்பயிற்சி
1. உங்கள் கையைத் தொடைமீது வைத்து இருந்து கொண்டு மூச்சை உள்ளேயிழுத்து இரண்டு தோள்களையும் காதுவரை உயர்த்தி மூச்சை விட்டவாறு தோளை இறக்குங்கள். இப்படி ஐந்து தடவை செய்தால் பேதும். தோள்களை அசைத்தவாறு கழுத்தை முன்னும் பின்னும் இடம் வலமாகத் திருப்புங்கள்.
2. முதுகை நேராக வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்து இரண்டு கைகளையும் உயரே தூக்கவும், கை விரல்களை கோர்த்துக் கொண்டு உள்ளங்கையை மேல்பக்கமாகத் திருப்பி மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிரலைக்குத் திரும்புங்கள்.
3. கைவிரல்களால் தலையை மெதுவாக அழுத்திவிடவும். இதனால் தூக்கக் கலக்கம் போகும். காது மடல்களை மெதுவாக ஐந்து நிமிடத்திற்கு அழுத்திக் கொடுக்கவும்.
4. கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றல் வரும். கண்களை மூடிக்கொணடு இரு கைகளையும் தேய்த்து சூடாக்கி கண்களுக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். விழிகளைச் சுழற்றுங்கள். இரண்டு பொட்டுக்களையும் அழுத்தி விடலாம். இதனால் களைப்பு போகும்.
5. மேசை முன் 45 பாகை கோணத்தில் கைகளை மேசை மேல் அழுத்தமாக வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது தோள் பழுவைக் குறைக்கும்.
6. இடுப்புவலி முதுகுத் தண்டு வலி வரும் போது மூளைக்கு பழு அதிகமாகும். வலது கையை இடது தொடைமீது வைத்துக்கொண்டு மூச்சை உள்ளேயிழுத்து பக்கமாகத்திருப்பி 2 நிமிடங்கள் கழுத்து பழைய நிலைக்கு வரவும். இது போன்று உடற்பயிற்சி செய்யும்போது தோள் கழுத்து பளு குறைந்து ஒட்சிசன் அதிகமாக மூளைக்குப் செல்கிறது.

தொகுப்பு ந. அ. பிரபாகரன்.